நவராத்ரி ஜோதியில் நவ துர்கை தோன்றுகிறாள்
சிவஷக்தி நம்மை காக்க திருவிளக்கில் தோன்றுகிறாள்
புரட்டாசி திங்களிலே புத்துணர்ச்சி ஊற்றுகின்றாள்
போற்றுபவர் வீட்டினிலே ஏற்றங்கள் காட்டுகிறாள்
அஞ்ஞான இருள் நீக்க அம்பிகை வாளெடுத்தாள்
அரர்க்கரை வேரறுக்க அம்சங்கள் மூன்றானாள்
மாகாளி மஹாலக்ஷ்மி சரஸ்வதி வடிவெடுத்தாள்
மதுகைடப வதம் செய்தால் மகிஷன் மேல் கால் வைத்தாள்
சும்பன் நிஷும்பன் எனும் துஷ்டரை அடக்க வந்தாள்
துக்கத்தை நீக்குவதால் துர்கை என பெயர் கொண்டாள்
சண்டி சாமுண்டி ஆதி பராசக்தி அவள்
தர்மத்தை காப்பதற்கு அவதாரம் செயகின்றாள்